சுமார் 9 கோடி பேரின் தகவல்கள் திருட்டு: அதிகாரபூர்வமாக அறிவித்த பேஸ்புக்

Report Print Kabilan in இன்ரர்நெட்
113Shares

சமூக வலைதளமான பேஸ்புக் பயன்படுத்தி வருபவர்களில், சுமார் 9 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளம் பேஸ்புக். இதன் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருவதாக வெளியான தகவல் பேரதிர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு காரணம், Cambridge Analytica எனும் அரசியல் ஆலோசனை நடத்தும் தளம் தான் என்று தெரிய வந்தது. இந்நிறுவனம், பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களின் தகவல்களை திருடி, தனது வாடிக்கையாளர்களுக்கு அவற்றை கொடுத்தது தெரிய வந்தது.

முதலில் சுமார் 5 கோடி பேரின் தகவல்கள் இவ்வாறு திருடப்பட்டதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனம் அந்நிறுவனத்தின் உறவை முறித்துக் கொண்டது.

இந்நிலையில், Cambridge Analytica சுமார் 8 கோடியே 70 லட்சம் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை திருடியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக்க வழங்கப்பட்ட புதிய Settings மூலமாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Cambridge Analytica சேகரித்த தகவல்களின் 81 சதவிதம் அமெரிக்க வாடிக்கையாளர்களுடையதாகும். மீதமுள்ள தகவல்கள் இந்தோனேஷியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் ஆகும். இதில் இந்தியர்கள் 5.6 லட்சம் பேரின் தகவல்களும் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை, பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பர்க், பேஸ்புக் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்