தனது பயனர்களுக்கு கூகுள் வழங்கும் மற்றுமொரு புதிய வசதி

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
86Shares
86Shares
ibctamil.com

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்கு மற்றுமொரு புதிய வசதியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி இனிவரும் காலங்களில் ஹோட்டல்கள் மற்றும் விமானப் பயணங்களை இலகுவாக பதிவு செய்துகொள்ள முடியும்.

தற்போது உலகின் பல நாடுகளிலும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பான தகவல்களை தனது தேடுதளம் ஊடாக கூகுள் வழங்கி வருகின்றது.

அதாவது புகைப்படங்கள், விலைகள், விலாசம் போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

எதிர்காலத்தில் இத் தேடல்களில் கிடைக்கும் பெறுபேறுகளில் ஊடாக நேரடியாகவே முன்பதிவு செய்துகொள்ளும் வசதியினையும் வழங்கவுள்ளது.

பிரதானமாக மொபைல் சாதனங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகின்றது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்