ட்ராய் அதிரடி உத்தரவு! ஜியோவின் இலவச சேவைக்கு ஆப்பு

Report Print Basu in இன்ரர்நெட்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தது.

இதன்படி, ஜியோ பயனர்கள் 303 ரூபாய் செலுத்தி அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச இணைய சேவை தொடரலாம் என்று அந்நிறுவனம் கூறியிருந்தது.

இந்த சலுகையை பெற வரும் 15ம் திகதிக்குள் 99 ரூபாய் மற்றும் 303 ரூபாய் என இரு ரீசார்ஜுகளை செய்ய வேண்டும் என ஜியோ அறிவுறுத்தி இருந்தது.

இதில், ஜியோ ப்ரைம் வாடிக்கையாளராக மாற 99 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் (TRAI), ஜியோ-வின் இந்த 'சர்ப்ரைஸ் பேக்கை கைவிடுமாறு கூறியுள்ளது. இதையடுத்து, ஜியோ நிறுவனம், இந்த சம்மர் சர்ப்ரைஸ் சலுகை கைவிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், மார்ச் 31ம் திகதி முதல் இன்று வரை இந்த சலுகை சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு, மூன்று மாத குறிப்பிடப்பட்ட சேவை கொடுக்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments