கருத்துக்களை தெரிவிக்க பேஸ்புக்கிற்கு போட்டியாக புதிய தளம்

Report Print Meenakshi in இன்ரர்நெட்

சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் கருத்துகளை தெரிவிப்பதும், கேட்பதும் அதிகமாகி வருகிறது. ஏதேனும் ஒரு விஷயத்திற்கு வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவிப்பது என்பது மிக பிரபலமாகிவிட்டது.

ஒரு விஷயத்தினை நாம் பதிவு செய்து அதற்கு நாம் கருத்தினை கேட்கும் போது உண்மையான கருத்தினை தெரிவித்தால் தவறாக நினைத்து கொள்வார்களோ என்று சரியான கருத்தினை தெரிவிக்காதவர்கள் பலர்.

இதனால் உண்மையே என்றாலும் அதற்கான சரியான கருத்துக்கள் கிடைப்பதில்லை.

ஃபேஸ்புக் poll போன்றவற்றில் வாக்களிப்பவர்களின் தகவல்களை நாம் தெரிந்து கொள்ள இயலும். இதனால் உண்மையான கருத்துக்களை தெரிவிப்பதற்கு தயக்கம் காட்டுவர்.

இத்தகையவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதே SayAt.me தளம். இந்த தளத்தில் நாம் கணக்கினை தொடங்கி மற்றவர்கள் ஒரு விஷயத்திற்கு கருத்து கேட்டால் நாம் கூறலாம்.

இந்த தளத்தில் நமது உண்மையான தகவல்கள் அறிந்து கொள்ள முடியாது என்பதில் தயக்கமின்றி நமது கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம்.

முதன்முதலாக இந்த தளத்தில் கணக்கினை தொடங்கும் போது மற்றொரு சமூக வலைத்தளத்தின் கணக்கினை பயன்படுத்தியே தொடங்கலாம். அதன் பின்னர் நமது பெயர், பாஸ்வேர்ட் போன்றவற்றினை மாற்றி கொள்ளலாம்.


இது கருத்து தெரிவிப்பரின் தகவல்களை அறிய முடியாமல் இருப்பது இதில் உள்ள மிக பெரிய பயன் என்றாலும், உண்மையான கருத்துக்களை தெரிவிப்பவர்களை நாம் அறிந்து கொள்ளவே முடியாது என்பது இதில் உள்ள குறையாகும்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments