விண்டோஸ் இயங்குதளத்தினை முந்தியது கூகுளின் அன்ரோயிட்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளமே கணினிகளில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது.

இதனால் மிகவும் பிரபல்யம் அடைந்ததாகக் காணப்பட்டது.

அதே போன்று இணையப் பாவனையிலும் அதிகம் விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணினிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன.

எனினும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளம் அறிமுகமாகிய பின்னர் மொபைல் சாதனங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதனால் ஏனைய இயங்குதளங்களை விடவும் குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்தது.

தற்போது இணையப் பாவனையில் முன்னணியில் காணப்படும் இயங்குதளம் என்ற பெயரினை விண்டோஸ் இயங்குதளத்தினை முந்தியதன் ஊடாக பெற்றுள்ளது.

இந்த தகவலை StatCounter எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தரவுகளின்படி 37.93 சதவீதம் அன்ரோயிட் இயங்குதளமும், 37.91 சதவீதம் விண்டோஸ் இயங்குதளமும் இணையப் பாவனையில் காணப்படுகின்றது.

இவற்றுக்கு அடுத்ததாக iOS, OS X என்பன காணப்படுகின்றன.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments