வாட்ஸ் அப்-ல் புதிய வசதி விரைவில் அறிமுகம்

Report Print Meenakshi in இன்ரர்நெட்

வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தும் பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப அநிறுவனம் அதில் புதிய வசதிகளை ஏற்படுத்தி அறிமுகப்படுத்தி வருகிறது.

சமீபத்தில் ஸ்டேட்டஸ் போடுவதற்கான வசதியினை அறிமுகப்படுத்தியது.

தற்போது வாட்ஸ் அப்-ல் ஒரே நேரத்தில் ஒரு நபரின் தொலைபேசி எண்ணை மட்டுமே மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இயலும்.

அடுத்ததாக ஒரே நேரத்தில் 50 தொலைபேசி எண்களை அனுப்பும் வசதியினை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த வசதியினை 2.17.122 - 2.17.123 க்கு இடையேயான பதிப்புகளில் பெற இயலும்.

எண்களை அனுப்பும் முறை

  • வாட்ஸ் அப்-ல் நீங்கள் எண்களை பகிர விரும்பும் நபரின் Chat box-ல் File attachment-யை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதில் உங்கள் மொபைலில் பதியப்பட்டுள்ள(Contacts) அனைத்து நபர்களின் எண்களும் காட்டப்படும்.
  • நீங்கள் அனுப்பவேண்டிய எண்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • நீங்கள் தெரிவு செய்த நபர்களது பட்டியல் மேலே(Top) காட்டப்படும்.
  • பச்சை வண்ணக்குறியீட்டை(Go Arrow)வை அழுத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்கள் குறித்த நபருக்கு அனுப்பப்படும்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments