ஓர் எச்சரிக்கை செய்தி: வாட்ஸ் அப்பில் பொய்யான லிங்க்

Report Print Deepthi Deepthi in இன்ரர்நெட்
356Shares

வாட்ஸ் அப்பில் வீடியோ காலிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பலரும் அதனை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் வாட்ஸ் அப்பில் இருக்கும் Group Chat போன்று Group Calling இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், பொய்யான வாட்ஸ் அப் வீடியோ காலிங் லிங்க் ( fake link) ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

பயனர்கள் அந்த லின்க்கை க்ளிக் செய்ததும், பிறருக்கு இன்வைட் அனுப்புமாறு மற்றொரு லின்கிற்கு அழைத்து செல்லுமாம்.

மேலும் வாட்ஸ் அப் Group calling வசதி உள்ளதாகவும் அந்த ஃபேக் லின்க்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி, உங்களுக்கு வரும் பொய்யான லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments