அனைவரும் இலவச இணைய சேவை! பேஸ்புக்கின் சூப்பரான திட்டம்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

முன்னணி இணையத்தளங்களின் வரிசையில் கூகுளிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் காணப்பட்ட பேஸ்புக் ஆனது தற்போது மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது.

இதேவேளை மூன்றாம் இடத்தில் காணப்பட்ட யூடியூப் ஆனது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந் நிலையில் மீண்டும் முன்னணிக்கு வர பேஸ்புக் நிறுவனம் பல அம்சங்களை பயனர்களுக்காக வழங்கி ஈர்த்து வருகின்றது.

இப்படியிருக்கையில் தற்போது இலவச இணைய சேவையினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் முனைப்புக்காட்டி வருவதாக வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்தியாவில் இவ் இலவச இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டிருந்த போதிலும் குறுகிய காலத்தில் மீளப்பெறப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் ஐக்கிய அமெரிக்காவில் மீண்டும் குறித்த சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குறைந்த வருமானம் உடையவர்கள் மற்றும் பின்தங்கிய கிராமங்களில் வாழ்பவர்கள் இச் சேவையின் ஊடாக பயன்பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சேவை அமெரிக்காவில் வெற்றியளிக்கும் பட்சத்தில் ஏனைய நாடுகளிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகின்றது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments