புதிய தொழில்நுட்பத்தை கையில் எடுத்த பேஸ்புக்!

Report Print Jubilee Jubilee in இன்ரர்நெட்
புதிய தொழில்நுட்பத்தை கையில் எடுத்த பேஸ்புக்!
542Shares

இணைய வசதியை அனைவரும் வழங்கும் முயற்சியில் களமிறங்கியுள்ள பேஸ்புக் நிறுவனம் லேசர் தொழில்நுட்பத்தை கொண்டு அதனை சாத்தியமாக்க முயற்சித்து வருகிறது.

கம்பிவழி அதிவேக தகவல் பகிர்வு வலையமைப்புகளில் (high-speed wired communication) பொதுவாக தகவல்களை அனுப்புவதற்கு லேசர் தொழிநுட்பம் பயன்படுத்தப்படும்.

அதே சமயம் வயர்லெஸ் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் தொழிநுட்பங்களில் அலைவரிசைகள் அல்லது நுண்ணலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் ஒரு ஒளிரும் பொருட்களின் மீது லேசரை செலுத்தி அதன் மூலம் இணைய சேவையை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

உலகம் முழுவதும் 4 பில்லியன் மக்கள் இணைய வசதி இல்லாமல் இருக்கும் நிலையில், இந்த தொழில்நுட்பம் மூலம் அவர்களுக்கு இணைய வசதியை அளிக்க முடியும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments