கூகுள் புதிய ஆன்ட்ராய்டின் பெயர் இதுதானா?

Report Print Basu in இன்ரர்நெட்
கூகுள் புதிய ஆன்ட்ராய்டின் பெயர் இதுதானா?
141Shares

கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் தனது ஆன்ட்ராய்டு மென்பொருளுக்கு, தன்னுடன் இணையவுள்ள நிறுவனத்தின் பெயரை வைப்பதையே வழக்கமாக வைத்துள்ளது.

கடந்த காலத்தில் வெளியான ஆன்ட்ராய்டு 4.4 பதிப்பிற்கு Android K அதவாது Android KitKat எனப் பெயர் சூட்டி கூகுள் வெளியிட்டது நினைவுக்கூரத்தக்கது.

இந்நிலையில் கடந்த மே மாதம், கூகுள் தான் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள ஆன்ட்ராய்டுக்கு, மக்களையே பெயர் தெரிவு செய்யுமாறு தெரிவித்திருந்தது. எனினும் இறுதியாக பெயரை அந்நிறுவனமே முடிவு செய்து வெளியிடும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், எதிர்வரும் நாட்களில் வெளியாகவுள்ள கூகுளின் புதிய ஆன்ட்ராய்டுக்கு, Android N அதவாது Android Nutella என பெயர் வைத்து வெளியிடப் போவதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், கூகுளின் ஆன்ட்ராய்டு துறையின் மூத்த துணை தலைவரான Hiroshi Lockheimer. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடரந்து Nutellaவை கேலி செய்யும் வகையில் பதிவிட்டு வருவதே ஆகும்.

இதனால், விரைவில் வெளியாகவுள்ள கூகுளின் புதிய ஆன்ட்ராய்டுக்கு Nutella என்ற பெயர் வர அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இப்பெயர் கூகுள் நிறுவனத்தினால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments