பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்

Report Print Basu in இன்ரர்நெட்
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் Instagram, Twitter, LinkedIn and Pinterest போன்ற சமூக வலைதளங்களில் உள்ள கணக்குகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.

டுவிட்டரில் 40,000 பேர் பின்தொடர்ந்து வரும் Ourmine என்னும் ஹேக்கர் குழுவே இச்செயலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து பெருமைப்படும் வகையில் அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர், அதில் அவர்களை தொடர்பு கொள்ள ஜூக்கர்பெர்க்கிற்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

பலர் ஜூக்கர்பெர்க்கின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

ஹேக்கர் குழுவால் முடக்கப்பட்டுள்ள டுவிட்டர் கணக்கை கடைசியாக கடந்த 2012ம் ஜூக்கர் பெர்க் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments