புதுச்சேரி... தமிழகத்திற்கான ஒத்திகை! திருமாவளவன் எச்சரிக்கை

Report Print Basu in இந்தியா
0Shares

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்டமிட்டு பாஜக நாகரிகமற்ற முறையில் புதுச்சேரி அரசை கவிழ்த்ததை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

புதுச்சேரி மக்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என பாஜக-வை எச்சரிக்கிறோம்.

புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து அரசியல் கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சனாதன சக்திகள் புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டிலும் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும், புதுச்சேரியில் நடப்பது தமிழகத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதற்கான ஒத்திகை என திருமாளவளவன் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்