என் மனைவி கோபித்துக் கொண்டு செல்ல நீ தான் காரணம்! சாமியாருக்கு நேர்ந்த கதி: கணவன் வெறிச்செயல்

Report Print Santhan in இந்தியா
0Shares

தமிழகத்தில் மனைவி கோபித்து கொண்டு சென்றதற்கு சாமியார் தான் காரணம் என்று, அவரை கணவர் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). இவர் அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் இருந்த படி, பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், இதே பகுதியில் வசித்து வரும் திருமலை(38) என்பவரி மனைவி அவருடன் சண்டை போட்டுக் கொண்டு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் கடும் வேதனையில் இருந்த திருமலை, தன்னுடைய மனைவி கோபித்து கொண்டு செல்வதற்கு

அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம், அவர் தான் தன்னைப் பற்றி தவறாக சொல்லியிருக்கலாம் என்று எண்ணிய் திருமலை, ராஜேந்திரனை ஆத்திரத்தில் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன் படி சாமியார் ராஜேந்திரனை சந்திப்பது போல் சென்று, அதன் பின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சாமியாரை கண்மூடித்தனமாக குத்தியுள்ளார்.

இதனால் ராஜேந்திரான், ரத்த வெள்ளத்தில் அலறியுள்ளார். இவர் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, திருமலையை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தியால் குத்தபட்ட ராஜேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்