சட்டசபை தேர்தல்... இரண்டு தொகுதிகளை குறிவைக்கும் கமல்!

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares

எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட கமல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா எதிர்வரும் 21ம் திகதி ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது.

அன்று, கூட்டணி கட்சிகள் குறித்து உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. மட்டுமின்றி, அன்றை தினம், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களும் பெறப்படுகின்றன. 'ஒன்லைனிலும்' மனுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கமல் கட்சிக்கு ஓட்டு வங்கி அதிகமாக இருந்தது.

இதனால் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தியாகராய நகரிலோ அல்லது மைலாப்பூரிலோ அல்லது இரண்டிலுமோ போட்டியிட கமல் விருப்பப்படுகிறார் என அவரது கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்