100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பெண் நீதிபதிக்கு அனுப்பி வைத்த பெண்! என்ன காரணம் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா
0Shares

மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருபவர் பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா(51)

இவர் கடந்த .ஜனவரி மாதம் 19-ஆம் திகதி அன்று போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்தார்.

அப்போது, தோலோடு தோல் தொடர்பின்றி சிறுமியை சில்மிஷம் செய்வது போக்சோ சட்டப்படி குற்றமில்லை என தீர்ப்பளித்தார்.

5 வயது சிறுமி பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்தவர், சிறுமியின் கையை பிடித்திருப்பதோ, பேண்ட் ஜிப் திறந்திருப்பதோ பாலியல் வன்முறை ஆகாது என கூறி குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்தார்.

இவரின் இந்த சர்ச்சை தீர்ப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து,

இவரது பதவிகாலத்தை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தேவஸ்ரீ திரிவேதி என்ற பெண், சர்ச்சைக்குரிய தீர்ப்பு அளித்த அந்த பெண் நீதிபதிக்கு 100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பார்சலில் அனுப்பி வைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்