சீமானின் நாம் தமிழர்கள் கட்சியில் என்ன பிரச்சனை? எதற்காக கட்சியில் இருந்து விலகினோம்: முன்னாள் நிர்வாகிகள் விளக்கம்

Report Print Santhan in இந்தியா
0Shares

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் பலர், அக்கட்சியில் என்ன நடக்கிறது, எதற்காக அந்த கட்சியில் இருந்து பிரிந்து வந்தோம் என்பது குறித்து கூறியுள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கிவிட்டன.

குறிப்பாக நாம் தமிழர் கட்சி நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை, மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று கூறிவிட்டது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்பில் இருந்த 500 பேர் விலகி திமுக-வில் இணைந்தனர்.

ஆனால், அதற்கான காரணம் என்ன என்பது குறியாக சரியாக தெரியாமல் இருந்தது. இதையடுத்து திமுக-வில் இணைந்த அவர்கள் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், கட்சியின் கொள்கை மாறிவிட்டது, அவர்கள் சொல்வது தான் வேட்பாளர், நாங்கள் சொல்வதை எதுவும் கேட்பதில்லை, எங்கள் பேச்சை மதிப்பதில்லை.

முன்பெல்லாம் அதாவது 2016-ஆம் ஆண்டு கட்சி ஒரு மாதிரி இருந்தது, ஆனால் இப்போது பணம் வைத்திருப்பவர்கள், ஜாதி போன்றவை எல்லாம் வந்துவிட்டது என வேதனையுடன் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்