குழந்தையை முழுமையாகத் தூக்கி கூட கொஞ்சல! குழந்தை பிறந்த 20 நாட்களில் உயிரிழந்த இலங்கை தமிழர்.. கதறும் அவர் மனைவியான ஈழப்பெண்

Report Print Raju Raju in இந்தியா
0Shares

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழரான மீனவர் ஒருவர் சமீபத்தில் இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த நிலையில் அவரின் மனைவி மற்றும் 20 நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தையின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ள்து.

கடந்த 18ஆம் திகதி தமிழகத்தின் மண்டபம் முகாமைச் சேர்ந்த சாம்சன் டார்வின், உச்சிப்புளி வட்டான்வலசை பகுதியைச் சேர்ந்த நாகராஜன், தாத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் இருந்து சென்ற இவர்கள், அன்று இரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் வலைகளை பாய்ச்சியபடி மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் மாயமான மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது.

இலங்கை கடற்படையினர் தாக்குதலால் அவர்கள் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

உயிரிழந்த நால்வரில் ஒருவரான சாம்சன் டார்வின், இலங்கைத் தமிழர். 2009ஆம் ஆண்டு அவர் தமிழகம் வந்துள்ளார்.

அங்கு வந்து இலங்கை தமிழர்கள் முகாமில் வந்து தங்கிய அவருக்கும், அதே முகாமை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்தாண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

டார்வின் - விஜயலட்சுமி தம்பதிக்கு 20 நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையை முழுமையாகத் தூக்கி கொஞ்சக் கூட முடியாத நிலையில் டார்வின் உயிரிழந்துள்ளார்.

அவரின் மரணத்தால் வேதனையில் கதறிதுடிக்கும் விஜயலட்சுமியின் புகைப்படம் வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்