சட்டப்பேரவைத் தேர்தல்... முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் சீமான்

Report Print Arbin Arbin in இந்தியா
207Shares

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், முதலாவதாக நாம் தமிழர் கட்சி தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பெரவைத் தேர்தல் குறித்த திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. திமுக, அதிமுக உட்பட கட்சிகள் பல தங்கள் பரப்புரைகளை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், தஞ்சையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற விழாவில், தெரிவு செய்யப்பட்ட 35 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை சீமான் வெளியிட்டார்.

தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் விழாவில் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்