சசிகலாவுக்கு தீவிர நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளததோடு கடுமையான நுரையீரல் தொற்று! மருத்துவமனை முக்கிய அறிக்கை

Report Print Raju Raju in இந்தியா
148Shares

சசிகலாவுக்கு தீவிர நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளததோடு நுரையீரல் தொற்றும் உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருந்த சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சசிகலாவுக்கு கடுமையான நிமோனியா காய்ச்சல் மற்றும் அதிதீவிர நுரையீரல் தொற்று இருப்பதாக மருத்துவமனை சற்றுமுன்னர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று உள்ளதால் தனிவார்டில் சிகிச்சை பெறும் சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்