வீடு வீடாக கெஞ்சியும் யாரும் வரல! முதல் கணவருக்கு பிறந்த மகளுடன் சேர்ந்து வசித்த 35 வயது தாய்க்கு 2வது கணவனால் நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா
1480Shares

தமிழகத்தில் 7 வயது சிறுமி கண்முன்னர் அவளது தாயை அடித்து கொலை செய்த, தாயின் 2 வது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவடியை சேர்ந்தவர் சரிதா (35). இவர் கணவர் சுரேஷ். தம்பதிக்கு செர்மிலி (7) என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் மதன் (42) என்பவருடன் காதலில் விழுந்த சரிதா அவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

மதனுக்கும் ஏற்கனவே அலமேலு என்ற மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்களை பிரிந்த பின்னரே சரிதாவை மணந்தார். திருமணத்துக்கு பின்னர் மதன் - சரிதா தம்பதிக்கு மெகிலினா என்ற பெண் குழந்தை பிறந்தது.

மதனுடனான திருமணத்துக்கு முன்னர் வரை சரிதா வேலைக்கு சென்ற நிலையில் பின்னர் வேலையை விட்டுள்ளார்.

இந்த நிலையில் சமீபகாலமாக சரிதா, மீண்டும் வேலைக்கு செல்வேன் என மதனிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே கடந்த சில தினங்களாக மதனுடன் அவரது முதல் மனைவி அலமேலுவின் மகள் சங்கீதா செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த தகவல் சரிதாவுக்கு தெரிந்து ஆத்திரம் அடைந்து சண்டையிட்டதாக கூறப்படுகின்றது.

முதல் மனைவி, குழந்தைகளுடன் தொடர்பில்லை எனக் கூறி தன்னை திருமணம் செய்து ஏமாற்றியது ஏன் என கேட்டு தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் மீண்டும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 7 வயது மகள் செர்மிலி அருகில் இருந்த நிலையில் ஆத்திரமடைந்த மதன் வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து சரிதாவின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே சரிதா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தனது கண்முன் தாயை அடித்துக்கொலை செய்யப்பட்டதை பார்த்த, செர்மிலி அதிர்ச்சி அடைத்து கதறி அழுதார்.

இதன் பிறகு மதன், தனக்கு பிறந்த 7 மாத குழந்தையுடன் அங்கிருந்து தப்பி ஓடினார்.பின்னர் பொலிசார் தலைமறைவாக இருந்த மதனை கொலைநடந்த 3 மணி நேரத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அப்போது பொலிசாரிடம் செர்மலி, இரும்பு கம்பியால் தாய் தாக்கப்படுவது குறித்து வீடு வீடாக சென்று கெஞ்சி உதவி கேட்டும் ஒருவர் கூட உதவுவதற்கு வரவில்லை என அழுது கொண்டே கூறியது பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்