பெண் குழந்தைகளின் உடம்பில் இருந்த காயம்; விசாரித்த தாயின் இதயத்தில் இறங்கிய இடி! வெளிவந்த தந்தை- மகன் கொடூரர்களின் நாசவேலை...

Report Print Ragavan Ragavan in இந்தியா
975Shares

கேரளாவில் 11 மற்றும் 7 வயது சிறுமிகள் கொடூரமாக நாசம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் அருகே வெள்ளறடை கிராமம் அமைந்துள்ளது.

அப்பகுதியில் பால்ராஜ் (71) மற்றும் அவரது மகன் ராஜ் (42) வசித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் கூலி வேலை செய்துவருகினறனர். ராஜுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் வசித்துவந்த வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி, ராஜின் மனைவியின் சொந்தக்காரப் பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

அந்த பெண்ணுக்கு 11 மற்றும் 7 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில், அந்த பெண் திடீரெனெ தனது இரண்டு பெண் குழந்தைகளை கவனிக்கையில், அவர்களின் முகம் மற்றும் உடலில் சிறு சிறு காயங்கள் இருந்தது தெரியவந்தது.

பதறிப்போன தாய், தனது மகள்களிடம் காயங்கள் எப்படி வந்தது என விசாரித்துள்ளார். ஆனால் பயத்தில் சிறுமிகள் சரியாக பதிலளிக்காததால், சந்தேகமடைந்து இருவரையும் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் சோதனை செய்ததில் இருவருக்குமே பெண்ணுறுப்பில் கடுமையான காயம் இருந்தது தெரியவந்தது. அப்போது சிறுமிகளை மருத்துவர்கள் விசாரித்தபோது தான் உண்மை தெரியவந்தது.

குழந்தைகள் தங்களுக்கு சரியாக என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் மருத்துவர்களிடம் நடந்த சம்பவத்தை பயத்துடன் கூறியுள்ளனர்.

அவர்கள் நடத்தவற்றை முடிந்தவரை விளக்கியதையடுத்து, அவர்களது சொந்தக்காரர்களான பால்ராஜ் மற்றும் அவரது மகன் ராஜ் இருவரும், வீட்டில் தனியாக இருந்த குழந்தைகளை மிரட்டி, கொடூரமாக வன்கொடுமை செய்துள்ளனர் என்பது அப்பட்டமாக தெரியவந்தது.

மருத்துவர்கள் உடனடியாக பொலிஸுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, பால்ராஜ் மற்றும் அவரது மகன் ராஜ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தந்தை-மகன் இருவர் மீதும் போக்சோ சத்தத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின்னர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்