வலுக்கட்டாயமாக பாலின மாற்ற அறுவை சிகிச்சை... கூட்டு பலாத்காரம்: 13 வயது சிறுவன் பட்ட அவஸ்தை

Report Print Arbin Arbin in இந்தியா
522Shares

இந்திய தலைநகர் டெல்லியில் 13 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தி, பல ஆண்டுகளாக பலாத்காரத்திற்கும் இரையாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நான்கு பேர் கொண்ட கும்பல், குறித்த சிறுவனை பலாத்காரத்திற்கு இரையாக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நடனம் தொடர்பான நிகழ்ச்சியில் வைத்தே 13 வயதான ரித்விக் அந்த நால்வர் கும்பலுக்கு அறிமுகமானதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, நடனம் பயிற்றுவிப்பதாக ஆசை வார்த்தை கூறி, அந்த கும்பல் சிறுவன் ரித்விக்கை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளது.

சில நிக்ழச்சிகளில் பங்கேற்க வைத்துள்ளதுடன், அதற்கான ஊதியத்தையும் வழங்கியுள்ளனர்.

அதன் பின்னர் அந்த நால்வர் கும்பலுடன் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக சிறுவன் ரித்விக் தெரிவித்துள்ளான்.

இதனிடையே, போதை மருந்து பழக்கத்திற்கு தம்மை அந்த கும்பல் அடிமையாக்கியதாக கூறும் ரித்விக்,

வலுக்கட்டாயமாக பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்கும் உட்படுத்தியதாக தெரிவித்துள்ளான்.

தொடர்ந்து ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்பட்டதன் மூலம், தனது உடம்பில் மாற்றங்கள் மிக விரைவில் ஏற்பட்டதாகவும் ரித்விக் வெளிப்படுத்தியுள்ளான்.

இதனையடுத்து, அந்த கும்பல் தம்மை தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாகவும்,

தமக்கு ஏற்பட்டது தொடர்பில் வெளியே தெரியப்படுத்தினால், குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளான்.

இதனிடையே நண்பனுடன் ரித்விக் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து, தாயாருடன் இணைந்ததாகவும், ஆனால் அந்த கும்பல் துப்பாக்கியுடன் வந்து தாயாரை மிரட்டி, தம்மை மீண்டும் அவர்களுடன் கொண்டு சென்று துன்புறுத்தியதாக ரித்விக் தெரிவித்துள்ளான்.

இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் அங்கிருந்து தப்பிய ரித்விக், சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் டெல்லி மகளிர் ஆணையத்தை நாடியதாகவும், அவர்களே சட்ட நடவடிக்கை முன்னெடுத்து காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளான்.

இந்த விவகாரம் தொடர்பில், அந்த நால்வர் கும்பலில் இருவரை டெல்லி பொலிசார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவான இருவர் தொடர்பில் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்