30 வயது மனைவிக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட 45 வயதான கணவன்! வெளியான காரணம்

Report Print Raju Raju in இந்தியா
3407Shares

இந்தியாவில் ஒன்றரை வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரியை சேர்ந்தவர் சிதி பரசுராம் (45). இவர் மனைவி தன சாவித்ரி (30).

விவசாயம் செய்து வந்த இந்த தம்பதிக்கு நாகவெங்கட் ஸ்ரீனிவாஸ் என்ற மகன் இருந்தான்.

இந்த நிலையில் பரசுராமும், சாவித்ரியும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி பரசுராம் சாவித்ரிக்கு விஷம் கொடுத்தார், பின்னர் குழந்தைக்கும் விஷம் கொடுத்துவிட்டு அவரும் அதை குடித்தார், பின்னர் மூவரும் உயிரிழந்தனர்.

இறப்பதற்கு முன்னர் தங்கள் உறவினருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்த மூன்று சடலங்களையும் கைப்பற்றினர்.

இது குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன்படி சோடிசெட்டி ஹேமா என்ற பெண் சாவித்ரியுடன் நட்பாகியிருக்கிறார்.

நிதி நிறுவனம் நடத்தி வந்த ஹேமா, சாவித்ரியிடம் நீங்கள் என் நிதி நிறுவனத்தில் எவ்வளவு பணம் போட்டாலும் அதை விட பல மடங்கு அதிகமாக உங்களுக்கு பணம் வட்டியோடு கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

இதை நம்பிய சாவித்ரியும் தன்னிடம் இருந்த பணம் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கி ரூ 25 லட்சத்தை ஹேமாவிடம் கொடுத்திருக்கிறார்.

அதை வாங்கி கொண்ட ஹேமா பின்னர் தலைமறைவானார்.

இதன்பின்னர் சாவித்ரிக்கு கடன் கொடுத்த நபர்கள் அவரிடமும், பரசுராமிடமும் பணத்தை திரும்பி கேட்க தொடங்கினர்.

இதனால் செய்வதறியாது அவமானத்தில் தவித்த பரசுராம் - ஹேமா தம்பதி இந்த விபரீத செயலை செய்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் தலைமறைவாக உள்ள ஹேமாவை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்