சசிகலா நான் முதலமைச்சர ஆக காரணமா? முதல் முறையை தெளிவான விளக்கம் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி

Report Print Santhan in இந்தியா
409Shares

தமிழக முதல்வராக நான் தான் இருக்க வேண்டும் என்று சசிகலா தெரிவு செய்ததாக கூறப்படுவதை, எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிமுக-வின் முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பிரச்சாரங்களை தொடர்ந்து வருகிறார்.

இருப்பினும் அதிமுக-வில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனதற்கு சசிகலா தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

இது குறித்த கேள்விக்கு பழனிச்சாமி கூறுகையில், கட்சிக்குள் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்ட போது, தாம் முதலமைச்சராக வேண்டும் என்பதே பெரும்பாலான எம்.எல்.ஏக்களின் விருப்பமாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தம் மீது மிகவும் நம்பிக்கை கொண்டு இருந்தார் என்பது அமைச்சர்களுக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும்.

1989-ஆம் ஆண்டு ஜெயலலிதா, அதிமுக அணி சார்பில் தாம் முதன்முதலாக சேவல் சின்னத்தில் போட்டியிட்ட தருணத்தில் இருந்து அவரது மறைவு வரை கட்சிக்கு உண்மையான தொண்டனாக பணியாற்றியது அனைவரும் அறிந்த ஒன்று.

கட்சிக்காக பல்வேறு போராட்டங்களில் கைதாகி சிறை சென்று இருப்பதாகவும் 2021-ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதி கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டபோதும் அதிருப்தி அடையாமல், வெற்றிக்கு பாடுப்பட்டதாகவும் பழனிசாமி கூறியுள்ளார்.

கட்சிக்கும் தலைமைக்கும் அரசாங்கத்திற்கும் விசுவாசம் உள்ளவனாக இருந்த காரணத்தினால் தம் மீது நம்பிக்கை வைத்து எம்எல்ஏக்கள் முதலமைச்சராக தெரிவு செய்ததாகவும், சசிகலா தன்னை தெரிவு செய்யவில்லை என்பதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்