சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியாகும்? இந்த முறை பெண்களுக்கு 117 என அறிவிப்பு

Report Print Santhan in இந்தியா
199Shares

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில், போட்டியிடுவது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தல் தமிழகத்தில் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினி பின் வாங்கிவிட்டார்.

இருப்பினும் மக்கள் தங்கள் கட்சி போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்துவிட்டார். இதனால் இவர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

இதே போன்று தமிழ்கத்தின் மிகப் பெரிய கட்சிகளான அதிமுக, திமுகவும் பிரச்சாரத்தை துவங்கிவிட்டன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 117 பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுகிறார்கள்.

மீதம் உள்ள 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்கள் களம் காண்பார்கள். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் 60 சதவீதம் அளவுக்கு நிறைவுபெற்று விட்டன.

மீதமுள்ள பணிகளும் இன்னும் சில நாட்களில் முடிவடைந்து இறுதி வடிவம் பெற்றுவிடும் என்று கூறினார்.

மேலும்,இந்த மாத இறுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள், பட்டியலை சீமான் அறிவிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்