இந்தியாவில் மேலும் 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி! மொத்த எண்ணிக்கை 96-ஆக உயர்வு

Report Print Ragavan Ragavan in இந்தியா
31Shares

இந்தியாவில் புதிய பிரித்தானிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96-ஆக உயர்ந்துள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் கடந்த மாதம் தென்கிழக்கு பகுதியில் முதல் முறையாக B117 எனும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

70 சதவீதம் மிகவும் வேகமாகப் பரவக்கூடியதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கும் இந்த வைரஸ் பிரித்தானியாவின் மற்ற பகுதிகளிலும் மிக வேகமாக பரவ ஆரம்பித்தது.

அங்கிருந்து பயணித்தவர்கள் மூலமாக டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் B117 தொற்று பரவியது.

இதனையடுத்து, பல நாடுகள் பிரித்தானியாவுடனான போக்குவரத்தை தற்காலிகமாக தடைசெய்தது.

அதேபோல், இந்தியாவும் பிரித்தானியா உடனான போக்குவரத்தை தடை செய்திருந்தது.

ஆனால், டிசம்பர் 29-ஆம் தேதி திகதி பிரித்தானியாவிலிருந்து இந்தியா திரும்பிய 6 பேருக்கு B117 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நாடு முழுவது பயணிகளின் விவரங்களைக் கொண்டு மாநிலங்கள் முழுவதும் வீடுவீடாக சோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் பல பேர் இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

சனிக்கிழமை வரை, பிரித்தானிய வகை உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90-ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 6 பேருக்கு அந்த தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில், பிரித்தானியாவின் COVID-19 விகாரத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 96-ஆக உயர்ந்துள்ளது என இந்திய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த மக்கள் அனைவரும் அந்தந்த மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட சுகாதார வசதிகளில் ஒற்றை அறை தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது நெருங்கிய தொடர்புகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் சக பயணிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறருக்கு ஒரு விரிவான தொடர்பு-தடமறிதல் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், நிலைமை கண்காணிக்கப்பட்டு, மேம்பட்ட கண்காணிப்பு, கட்டுப்பாடு, சோதனைகல் மேற்கொள்ளப்படுகின்றன மற்றும் மாதிரிகளை INSACOG ஆய்வகங்களுக்கு அனுப்புவதற்கு மாநிலங்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்