அம்மாவை கொன்னுட்டேன்! கணவரை பிரிந்து வாழ்ந்த 38 வயது தாயை கொன்ற 20 வயது மகன்... வெளியான அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in இந்தியா
1422Shares

இந்தியாவில் தாய் உள்ளிட்ட இரண்டு பேரை சுட்டு கொன்ற இளைஞனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரை சேர்ந்தவர் சுமன் செளத்ரி (38). இவருக்கு பங்கஜ் (20) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சுமன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவர் மற்றும் குடும்பத்தாரை பிரிந்து விட்டார். இதையடுத்து தனது மகன் பங்கஜுடன் தனியாக வசித்து வந்தார்.

சுமன் வசிக்கும் வீட்டின் அருகில் மட்டாதீன் என்ற மருத்துவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சுமனுக்கும், மட்டாதீனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் ரகசியமாக சந்தித்து வந்த நிலையில் அதை பங்கஜ் கண்டுபிடித்து தாயை கண்டித்தார். இந்த நிலையில் நேற்று மட்டாதீன் வீட்டுக்கு ரகசியமாக சென்ற சுமன் அவரை சந்தித்துள்ளார்.

அப்போது அங்கு சென்ற பார்த்த பங்கஜ் ஆத்திரமடைந்த நிலையில் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் இருவரையும் சரமாரியாக சுட்டு கொன்றுள்ளார்.

பின்னர் தனது சகோதரிக்கு போன் செய்து நமது அம்மாவை கொன்றுவிட்டேன் என கூறி இணைப்பை துண்டித்தார். இதையடுத்து அங்கிருந்து தப்பியோடினார் பங்கஜ்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பங்கஜ் சகோதரி பொலிசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு சடலங்களையும் கைப்பற்றினார்கள்.

மேலும் பங்கஜை தேடி வரும் பொலிசார், அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்து என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்