நதி டால்ஃபினை துடி துடிக்க கொடூரமாக அடித்து கொன்ற கும்பல்! வைரலாகும் பரிதாப வீடியோ: 3 இளைஞர்கள் கைது

Report Print Ragavan Ragavan in இந்தியா
665Shares

இந்தியாவில் நதி டால்ஃபினை அடித்து வெட்டிக் கொன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்திர பிரதேச மாநிலத்தில் கும்பல் ஒன்று, அரியவகை கங்கை டால்ஃபின் மீனை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்த கங்கை நதி டால்ஃபின் இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காகும், இந்த மீன் பாதுகாக்கப்படவேண்டிய அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளது.

டிசம்பர் 31-ஆம் திகதி நடந்த இந்த தாக்குதலில், இளைஞர்கள் டால்பினை மறக்க கட்டைகள், இரும்புக் கம்பிகள் மற்றும் கோடரியால் பயங்கரமாக தாக்கியுள்ளனர்.

இரத்தம் வரும் வரை அடித்து, தலையில் கோடாரியால் வெட்டிய நிலையில் அந்த டால்ஃபின் நீருக்குள் இறந்து மூழ்கியது.

இந்த சம்பவம் பதிவான வீடியோவில், ஒருவர் “நீங்கள் எந்த காரணமும் இல்லாமல் அதைத் தாக்குகிறீர்கள்” என்று கூச்சலிடுகிறார். அதேசமயம் மற்றொருவர் “அதைத் தாக்குங்கள், அடியுங்கள்" என கத்துகிறார்.

பின்னர், அந்த டால்ஃபின் உடலில் ஆழமான சிதைவுகளுடன் இறந்து கிடந்த நிலையில், வனத்துறையைச் சேர்ந்த உள்ளூர் அதிகாரி ஒருவர் அதனைக் கண்டுபிடித்தார். ஆனால் விசாரிக்கப்பட்டபோது, கிராமவாசிகள் அந்த விலங்கு எவ்வாறு இறந்தது என்பது குறித்து வாய் திறக்கவில்லை.

ஆனால் தாக்குதலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. தேசிய அளவில் அந்த விடியோவைப் பார்த்த மக்கள் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் கங்கை நதி மற்றும் பாகிஸ்தானின் சிந்து நதியில் வாழும் ஒரு நன்னீர் பாலூட்டியான கங்கை டால்ஃபின், அதன் நீண்ட மூக்கால் அடையாளம் காணக்கூடியது.

இது ஒரு ஆபத்தான மற்றும் பாதுகாக்கப்பட்ட இனமாகும். இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கான இது 5,000 க்கும் குறைவானவையே எஞ்சியுள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்