சீமானை சிறைக்குள் தள்ளியிருப்பார் ஜெயலலிதா! இதே வார்த்தையை அப்போது பேசவில்லையே? கொந்தளிக்கும் பிரபலம்

Report Print Santhan in இந்தியா
278Shares

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது, சீமான் எம்.ஜி.ஆர் ஆட்சி ஒன்றும் புனிதமானது அல்ல என்று பேசியிருந்தால், அவர் நிலையே வேறு மாதிரி இருக்கும் என்று எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி'யின் தலைவர் எம்.ஜி.ஆர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இப்போதில் இருந்தே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு பக்கம் அதிமுகவை திமுகவும், திமுகவை அதிமுகவும் மாறி மாறி குற்றம் சொல்லி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் நாம் தமிழர்கள் கட்சியின் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதில் சீமான் குறிப்பாக திமுகவை மட்டுமே குறி வைத்து பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாக சீமான் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, இவர் எம்.ஜி.ஆர் ஆட்சி ஒன்றும் புனிதமானது அல்ல என்றும் பேசியுள்ளார். இது குறித்து எம்.ஜி.ஆர் மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆர் விஸ்வநாதன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எம்.ஜி.ஆரைப் பற்றி விசாரிக்க சீமானுக்கு தகுதி கிடையாது.

அதிமுக-வினர் சீமானை உதட்டளவில் தான் விமர்சிக்கின்றனரே தவிர, கடுமையாக நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். நாங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கூறி வருகிறோம்.

இப்போது இவ்வளவு பேசும் சீமான், ஜெயலலிதா உயிரோடு இருந்த போது பேசியிருக்கலாமே? அப்போது ஏன் பேசவில்லை? தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆரைப் பிடிக்கவில்லை என்றாலும் கூட, கட்சியின் நிறுவனத் தலைவரை விமர்சித்தால் அவரை நிச்சயமாக ஜெயலலிதா சிறைக்குள் தள்ளியிருப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்