இந்தியாவில் தன் மனைவி மீது சந்தேகம் கொண்ட நபர் அவரை கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் Mahoba மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க சுனிதா என்ற பெண் கடந்த புதன் கிழமை வீட்டில் கொடூரமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Mahoba மாவட்டத்தில் சுனிதா-பால்ராம் என்ற தம்பதி வசித்து வந்தனர்.
இதில் சுனிதா பக்கத்து வீட்டில் இருக்கும் நபருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இது குறித்த தகவல் பால்ராமுக்கு தெரியவர, இது குறித்து மனைவி சுனிதாவிடம் வாக்குவாததில் ஈடுபட்டுள்ளார்.
இவர்களுக்கிடையே தொடர்ந்து இந்த பிரச்சனை இருந்து வந்த நிலையில், கடந்த புதன் கிழமை இவர்களுக்கிடையே மீண்டும் இந்த விவகாரம் தொடர, கோபத்தின் உச்சிக்கு சென்ற கணவர் பால்ராம் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து மனைவி சுனிதாவை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலே மனைவி துடி துடித்து உயிரிழந்தார். இது குறித்து சுனிதாவின் சகோதரர், பால்ராம் மிது புகார் கொடுக்க, பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பால்ராம் ஒரு நிலையற்ற மனம் கொண்டவர், அதாவது எப்போதும் மனைவி மீது சந்தேகம் கொண்டு, அவரிடம் சண்டை போட்டு கொண்டே இருப்பார் என அருகில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.