நண்பர்கள் முன் மனைவியை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்த கணவன்! அவமானத்தில் கூனிக்குறுகிய பின் நடந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
2419Shares

இந்தியாவில் கணவன் பல்வேறுவிதமாக துன்புறுத்தியதால் மனமுடைந்த மனைவி தனது குழந்தையுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பவன். இவர் மனைவி பிரியங்கா (25). இவர்களுக்கு 2 வயதில் மகன் இருந்தான்.

இந்த நிலையில் பிரியங்கா நேற்று தனது மகனுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய பொலிசார் விசாரணையை தொடங்கினர். அப்போது பிரியங்காவின் தந்தை ராம்கிஷோர் சில அதிர்ச்சி தகவல்களை பொலிசாரிடம் கூறினார்.

அதன்படி பவனும், அவர் தந்தையும் சேர்ந்து பிரியங்காவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது, வீட்டிலேயே தனது நண்பர்களை வரவழைத்து மது அருந்தியுள்ளார்.

அப்போது பிரியங்காவும் அனைவர் முன்னிலையிலும் மது அருந்த வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் வற்புறுத்தி குடிக்கவும் வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக பவன் - பிரியங்கா இடையே அடிக்கடி சண்டை வந்திருக்கிறது.

அனைவர் முன்னிலையிலும் தன்னை இப்படி அவமானப்படுத்தி கணவர் துன்புறுத்துகிறாரே என மன வேதனையடைந்த பிரியங்கா தனது மகனை தூக்கில் தொங்கவிட்டு பிறகு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் பவன் மற்றும் அவர் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்