மருமகனை இரவு நேரத்தில் சுவற்றில் மோதி கொலை செய்த மாமியார்! காரணம் என்ன? வெளிவந்த பின்னணி

Report Print Raju Raju in இந்தியா
602Shares

இந்தியாவில் மருமகனை சுவற்றில் மோதி கொலை செய்த மாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் தனோ (52). இவரின் மகளுக்கும் அஜய் (35) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான அஜய் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் மாமியாரிடம் தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அஜய், மனைவி மற்றும் மாமியார் தனோவுடன் சண்டை போட்டார். அப்போது மாமியாரை அடிக்கவும் பாய்ந்தார் அஜய்.

இதனால் ஆத்திரமடைந்த தனோ தனது மருமகன் அஜய்யை வேகமாக சுவற்றை நோக்கி தள்ளினார்.

இதில் அவர் தலை சுவற்றில் முட்டி இரத்தம் கொட்டியது, இதையடுத்து சம்பவ இடத்திலேயே அஜய் உயிரிழந்துவிட்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து அஜய்யின் சடலத்தை கைப்பற்றிவிட்டு தனோவை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடந்த அனைத்தையும் வாக்குமூலமாக அளித்துள்ளார். தொடர்ந்து தனோவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்