மனைவியைப் பற்றி கணவன் கொடுத்த மரண வாக்குமூலம்! காட்டிக் கொடுத்த பிள்ளைகள்: நடந்த பயங்கர சம்பவம்

Report Print Santhan in இந்தியா
916Shares

தமிழகத்தில் கணவன் மற்றும் பிள்ளைகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு நடாகமாடிய மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சோம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கும், அதி பெரமனூரை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு9 வயதில் ஒரு ஆண் மற்றும் 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சசிகுமார் தன் குழந்தைகளுன் தீக்குளித்துவிட்டதாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உயிருக்கு போராடிய சசிக்குமார் மற்றும் இரண்டு குழந்தைகளும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், சசிகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மனைவி பிரியா கணவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்திருந்த நிலையில், சசிகுமார் உயிரிழப்பதற்கு முன் நீபதியிடம் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதில், தன் மீதும் தனது பிள்ளைகள் மீதும் தனது மனைவி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தன் மனைவி தான் என்று கூறியதால், பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது, சசிக்குமார் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த படி தன் குழந்தைகள் மற்றும் மனைவியிடம் பேசுவதற்காக, ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஆனால், பிரியாவோ அந்த ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பல ஆண்களுடன் நண்பராகியுள்ளார். அதன் பின் அதில் சில ஆண்களுடன் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தாய் டிக்டாக்கில் திறமை காட்டுவதும் புதிது புதிதாக ஆண்களுடன் பேசுவதையும் கண்ட மகன் பிரதீப் செல்போன் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்த சசிகுமார் தனது மனைவியை கண்காணிக்க தொடங்கியுள்ளார்.

அப்போது குழந்தைகள் சொல்வது போன்று தான் மனைவியின் நடவடிக்கை இருந்துள்ளது. இதனால் மனைவியை கண்டித்துள்ளார். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் சம்பவ தினத்தன்று உறங்க சென்றுள்ளார்.

ஆனால், அதற்கு முன்னரே ப்ரியா கணவருக்கு உண்மை தெரிந்துவிட்டதால், தீர்த்து கட்ட வேண்டும் என்று 5 லிட்டர் பெட்ரோலை வாங்கி மறைத்து வைத்துள்ளார்.

அவர்கள் தூங்கிய பின் காட்டிக் கொடுத்த பிள்ளைகள் மற்றும் கணவன் மீது ஊற்றி தற்கொலை என நடகாமடியதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்