ரஜினிகாந்த்- சசிகலாவுக்கு இடையே போட்டி: சுப்பிரமணிய சுவாமி பரபர டுவிட்

Report Print Fathima Fathima in இந்தியா
612Shares

ரஜினிகாந்துக்கும், சசிகலாவிற்கும் இடையில் போட்டி இருக்கும் என பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், டிசம்பர் 31ம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து வரவேற்பும், விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ரஜினியின் அரசியல் வருகை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினியின் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது முடிவுக்கு வந்துவிட்டது.

அநேகமாக ரஜினிகாந்திற்கும் சசிகலாவிற்கும் இடையில் போட்டி இருக்கும். பாஜகவில் குழப்பம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்