கட்சியின் இரண்டு முக்கிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிமுகப்படுத்தினார் நடிகர் ரஜினி!

Report Print Basu in இந்தியா
564Shares

தான் தொடங்க இருக்கும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களை நியமித்து அறிமுகப்பத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினி எப்போது கட்சி துவங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரஜினி.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, கட்சியின் முக்கிய இரண்டு பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிமுகப்படுத்தினார்.

தான் தொடங்க இருக்கும் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தி என்பவரையும் நியமனம் செய்துள்ளார்.

தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன் மூர்த்தி, தமிழக பாஜகவில் அறிவுசார் பிரிவு தலைவராக தற்போது இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்