ஜனவரியில் கட்சித் துவக்கம்! இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல! நடிகர் ரஜினிகாந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Basu in இந்தியா
415Shares

நடிகர் ரஜினிகாந்த் எப்போது கட்சித் துவங்குவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கட்சித் துவங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல.

வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்...அதிசயம்...நிகழும்! என ரஜினி ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்