ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு! 18 மணி நேர போராட்டம் வீண்.. நெஞ்சை உருக்கும் தகவல்

Report Print Raju Raju in இந்தியா
587Shares

இந்தியாவில் தந்தையின் கவனக்குறைவால் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பகிராத் குஷ்வஹா. இவர் மனைவி கிரந்தி தேவி.

இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் ஒருவன் தான் தனேந்திரா (4).

பகிராத் கடந்த ஜூலை மாதம் தனது வயலில் பாசனத்திற்காக போர்வெல் குழி தோண்டினார்.

ஆனால் அதில் தண்ணீர் வரவில்லை, இதையடுத்து ஆழ்துளையை சரியாக மூடாமல் ஒரு கல்லை வைத்து மூடியிருந்தார். இந்த நிலையில் அப்பகுதியில் குழந்தைகள் விளையாடிய போது அந்த கல்லை வெளியில் எடுத்துள்ளது.

இந்த சூழலில் தனேந்திரா அந்த பகுதியில் புதன்கிழமை விளையாடி கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.

இதை உணர்ந்து கொண்ட சிறுவனின் தாய் தேவி கதறி அழுதார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு வந்து குழந்தையை வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது உள்ளிருந்த தனேந்திரா அழுதுள்ளான். பின்னர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு தனேந்திராவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

குழியானது 30 அடி வரை இருக்கும் என தெரியவந்துள்ள நிலையில் அந்த ஓட்டை மூலம் சிறுவனுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

மேலும் இரண்டு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தது.

நேற்று இரவு முழுவதும் அவன் குடும்பத்தார் அழுதபடி அங்கேயே உட்கார்ந்திருந்தனர்.

அந்த இடத்தில் ஆறு ஜேசிபி வாகனங்கள் உள்ளன, அதன் மூலம் சுற்றி பள்ளம் தோண்டப்பட்டது.

இந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவன் வெளியில் எடுக்கப்படுவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழிவினரின் 18 மணி நேர முயற்சி தோல்வியடைந்தது.

அதாவது சிறுவனை வெளியில் எடுத்த பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கே அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


You May Like This Video

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்