விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபர்: ஓடோடி வந்து மக்களை அழைத்த “தெரு நாய்”

Report Print Fathima Fathima in இந்தியா
194Shares

கேரளாவில் நபர் ஒருவர் குளத்தில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது உதவிக்காக தெரு நாய் மக்களை அழைத்த நெகிழ்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் ஜான்(வயது 48), பணி முடித்துவிட்டு ஆழப்புழாவிலிருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையில் கிடந்த உலோக கம்பி மீது வண்டியை ஏற்றியதால் நிலை தடுமாறினார்.

இதில் அருகிலிருந்து குளத்தில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார், இதை கவனித்த தெருநாய் ஒன்று துரிதமாக செயல்பட்டு அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்தது.

தொடர்ச்சியாக குரைத்துக் கொண்டே இருந்ததால், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் டார்ச் அடித்து குளத்தை பார்த்த போது தான் உண்மை தெரியவந்துள்ளது.

அதற்குள் அக்கம்பக்கத்தினர் வந்துவிடவே, விபத்தில் சி்க்கிய ஜானை காப்பாற்றினார், தலைகுப்புற விழுந்ததால் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்