ரஜினியின் அரசியல் பிரவேசம்? தமிழருவி மணியன் விளக்கம்

Report Print Fathima Fathima in இந்தியா
118Shares

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இன்று ரஜினியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன், நான் அவருக்கு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் எதையும் மறைத்து வைக்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு கிடையாது.

ரஜினியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். மக்கள் நலனுக்காக அவர் எதை நினைக்கிறாரோ அதை தான் இதுவரை சொல்லியுள்ளார்.அதைப்போலத்தான் தன்னுடைய உடல்நிலையில் உள்ள பிரச்சனைகளையும் சொன்னார்.

அவரது உடல்நலனில் எனக்கு அக்கறை உள்ளது.உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில்,சிந்தியுங்கள் என்று அவரிடம் கூறினேன்.

ஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. ரஜினி அரசியலுக்கு வருவாரா எனது ரஜினிக்குதான் தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்