மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருகிறது - வானிலை மையம் தகவல்

Report Print Kavitha in இந்தியா
156Shares

நிவர் புயலுக்கு பின் வங்ககடலில் உருவான புரெவி புயல் கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த புரெவி புயலானது, பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவிலும், குமரிக்கு தென்கிழக்கே 700 கி.மீ தொலைவிலும் இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில புரெவி புயல், இலங்கையின் திருகோணமலையில் இன்று கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் 3ந்திகதி மன்னார் வளைகுடா பகுதியைக் கடந்து, 4ந்திகதியில் தென் தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்நது புரெவி புயல் நெருங்குவதால் பாம்பன் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், தூத்துக்குடி துறைமுகத்தில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் புயல் கரையைக் கடக்கும் போது 75- 85 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்