தமிழகத்தின் சென்னை போன்ற போன்ற கட்லோர மாவட்டங்களை மிரட்டி வரும் நிவர் புயல் எப்போது முழுவதும் கரையை கடக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வங்க கடலில் உருவாகி உள்ள அதிதீவிர நிவர் புயல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும்.
இந்த புயல் முழுவதும் கரையை கடக்க நாளை காலை 10 மணி ஆகும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.
இது குறித்து வானிலை மையம் கூறுகையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்- செய்யூர் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே புயல் கரையை கடக்கும். இதுவரை16 கி.மீற்றர் வேகத்தில் கரையை நோக்கி வந்த புயல் தற்போது வேகம் குறைந்து 12 கி.மீற்றர் வேகத்தில் வருகிறது.
இரவு 11 மணிக்கு புயலின் கண் பகுதி கரையை தொடும். அதிகாலை 3 மணிக்கு புயலின் கண் பகுதி கரையை கடக்கும். புயல் முழுமையாக கரையை கடக்க காலை 10 மணி ஆகலாம். புயல் கரையை கடக்கும்போது வலுப்பெறும்.
புயல் கரையை கடக்கும் போது மரக்காணத்தில் 80 கி.மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புயல் காரைக்கால் - மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டது. இதையடுத்து காற்றின் அழுத்தம் குறைவாக இருந்ததால் புதுவை அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது.
இருப்பினும் புயல் சரியாக எங்கே கரையை கடக்கும் என்பது அது நெருங்கும் போதுதான் தெரியும் என கூறினார்கள்.
இரவுக்கு மேல் கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இது அதிகாலைதான் கரையை கடக்கும் என தெரிகிறது.
புயல் கரையை கடந்து 6 மணி நேரம் வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.