காதல் திருமணம் செய்த மகள்... நீதிமன்றத்தில் சொன்ன வார்த்தை! அதிர்ச்சியில் ஆடிப்போன பெற்றோர்

Report Print Santhan in இந்தியா
11766Shares

தமிழகத்தில் மகளை நம்பிக்கையுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த பெற்றோர், அவர் நீதிபதியிடம் சொன்ன வார்த்தையைக் கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு நித்யானந்தன் என்ற மகன் உள்ளார்.

நித்யானந்தன் அதே பகுதியில் சதீஸ் என்பவர் நடத்தி வரும் செல்போன் கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது சதீஷின் அக்காள் மகளான காயத்திரிக்கும், நித்யானந்தனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால் இவர்களின் காதலுக்கு காயத்ரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, இருவரும் கடந்த 2-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பின் இருவரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருமணம் செய்து கொண்டு, திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தைப் பதிவு செய்து கொண்டனர்.

இதற்கிடையில் காயத்ரியின் பெற்றோர் கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். அதன் பின் நித்யானந்தனை பொலிசார் அழைத்து விசாரித்த போது, அவருடன் காய்த்ரியும் வந்துள்ளார்.

அப்போது காயத்ரி பொலிசாரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பொலிசார், அவரை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து செல்போன் கடையின் உரிமையாளரும், காயத்திரியின் மாமாவுமான சதீஸ், நித்யானந்தனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களை நாங்கள் எதுவும் செய்யமாட்டோம்.

ரங்கம்பாளையம் பத்திர பதிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து காயத்திரிக்கும், அவரது பெற்றோர் சொத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எழுதிக் கொடுத்து விட்டுச் சென்று விடுங்கள் எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அவர்களும் அந்த பகுதிக்கு கடந்த 17-ஆம் திகதி காரில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சில தூரங்களுக்கு முன்பு, ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த சிலர், காயத்ரியை மட்டும் கடத்தி சென்றுள்ளனர்.

இதனால் பதறிப்போன நித்யானந்தன், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் காயத்திரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காதல் கணவரை மறந்துவிட்டு தங்களுடன் வந்துவிடுமாறு கூறியுள்ளனர்.

அதற்கு அவரும் பெற்றோருடன் இருப்பதாக ஒப்புக்கொண்டு உள்ளார். இதனால் தங்கள் மகள் தங்களோடு வந்து விடுவார் எனக் காயத்திரியின் பெற்றோர் நம்பிக்கையோடு இருந்த நிலையில், இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக காயத்ரி ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பெற்றோர் நேற்று அழைத்துச் சென்றார்கள்.

அங்கு நீதிபதி காயத்ரியிடம் விசாரித்த போது, அவர் தனக்குப் பெற்றோருடன் தனக்கு வாழ விருப்பமில்லை என்றும், தனது காதல் கணவர் நித்யானந்தனை அழைத்து வந்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார்.

இதைக் கேட்டு காய்த்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் நீதிபதி, நித்யானந்தனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் படி உத்தரவிட, காதல் கணவரான நித்யானந்தனுடன் காயத்திரியைச் சேர்த்து வைத்து நீதிபதி அனுப்பி வைத்தார்.

You May Like This Video

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்