நிவர் புயல் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள்! களத்தில் இறங்கி உதவிய நாம் தமிழர் கட்சி.. நெகிழ்ச்சி புகைப்படங்கள்

Report Print Raju Raju in இந்தியா
324Shares

தமிழகத்தில் நிவர் புயல் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு களத்தில் இறங்கி நாம் தமிழர் கட்சியினர் உதவி செய்து வருகின்றனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலின் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிக அளவாகச் சென்னையில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் பல பகுதிகளில் கனமழை காரணமாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் இன்னல் அடைந்தனர்.

புயல் மழையினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கொளத்தூர் தொகுதியில் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் பணியை நாம் தமிழர் கட்சியினர் செய்துள்ளனர்.

மேலும் கொளத்தூர் தொகுதியில் மழை மற்றும் காற்று காரணமாக கீழே விழுந்த மரங்களை அகற்றும் பணியில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்