கட்டிய தாலியை கழற்றி வீசிய காதல் மனைவி! அவர் செயலைப் பார்த்து புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

Report Print Kavitha in இந்தியா
539Shares

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருத்து வேறுபாறு காரணமாக, காதல் மனைவி கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றியதால் கணவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்த குறும்படங்களைப் படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளரான விஷ்ணுவுக்கு (22 வயது) திருப்பூரைச் சேர்ந்த (20 வயது) பெண்ணான சாலினியின் அறிமுகம் கிடைத்தது.

ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழகிய இருவருக்குள்ளும் விஷ்ணுவின் குறும்படத்தின் மூலம் காதல் மலர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால் திருமணமான சில நாட்களிலேயே அவர்களுக்குள் மனக்கசப்புகள் ஏற்பட்டடுள்ளது.

இதன்விளைவாக நண்பர்களுடன் செல்போனில் பேசுவது தொடங்கி, குடும்பத்தினர் தன்னைப்பற்றி விமர்சிப்பது வரை விஷ்ணுவிடம் சாலினி குறை கூற இருவருக்கும் இடையே பிரச்சினையாக உருவெடுத்தது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஆத்திரம் அடைந்த சாலினி அவர் கட்டிய தாலியை கழற்றி வீச இதனால் ஆத்திரத்திரமடைந்த விஷ்ணு அதிர்ச்சி அடைந்து வேகமாக தனது அறைக்கு சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டார்.

பின்னர் கதவை திறக்க முடியமால் திணறிய சாலினி உதவிக்கு உறவினர்களை அழைக்க, நீண்ட நேரம் போராடி அவர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது விஷ்ணு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கோட்டார் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸ், விஷ்ணுவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையே காதல் கணவர் தூக்கில் சடலமாக தொங்கியதை தாங்கிக்கொள்ள இயலாத சாலினி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர் கழுத்து அறுபட்டு ரத்தம் வழிந்தோடிய நிலையில் உயிருக்கு போராடிய சாலினியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கழுத்தில் காயம் அடைந்த சாலினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் தகராறு ஏற்பட்டது குறித்து விசாரிக்க இயலவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளளர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்