தீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் புயல்... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Kavitha in இந்தியா
97Shares

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் எனவும் அப்போது 155 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு நோக்கி 6 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புயலானது இரவு 11.30 மணிக்கு கடலூருக்கு 310 கி.மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 320 கி.மீட்டர் தொலைவிலும் , சென்னைக்கு 380 கி.மீட்டர் தொலைவில் நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளது.

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சில பகுதிகளுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் வலுவடைந்து வருவதால் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிப்பதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதனால் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்