இந்தியாவில் பள்ளி ஆசிரியரின் மனைவி வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் ராஜ்பள்ளியை சேர்ந்தவர் நீபல் தத்தா. பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் மனைவி ரீட்டா. தம்பதிக்கு தேவ்ரஞ்சன் (10) மற்றும் சுபோஜித் (8) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை புதிதாக கட்டும் வீட்டை பார்வையிட நீபல் தனது 2 பிள்ளைகளுடன் சென்றார்.
அப்போது வீட்டில் ரீட்டா தனியாக இருந்தார். பின்னர் மூவரும் வீடு திரும்பிய போது ரீட்டா மின்விசிறியில் சடலமாக தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.
இந்த காட்சியை பார்த்த அவரின் கணவர் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ரீட்டாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.
விசாரணையில், நீபல் மற்றும் அவர் பிள்ளைகள் பொலிசாரிடம் சில விடயங்களை கூறினார்கள்.
அதாவது, நாங்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது நீட்டா மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருந்தார் என்பதை அவர் முகமே காட்டியது.
ஆனால் அவருக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் இருந்ததால் சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்தார் என கூறினர்.
கணவன் மற்றும் பிள்ளைகள் வீட்டை விட்டு கிளம்பும் போது மகிழ்ச்சியுடன் இருந்த போதிலும், உடல் பிரச்சினை அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறது, இதன் காரணமாக திடீரென இந்த தற்கொலை முடிவை அவர் எடுத்திருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.