திருமண ஆசையில் வீட்டை விட்டு ஓடிய இலங்கை தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த நிலை! குழந்தையோடு வந்து நிற்கும் பரிதாபம்

Report Print Santhan in இந்தியா
11803Shares

இலங்கை தமிழ் பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞன் பல பெண்களை நான் அவர் இல்லை படப் பாணியில் ஏமாற்றியிருப்பது அம்பலமாகியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த குருக்குபட்டி இலங்கை அகதிகள் முகாமில் இந்திரகுமார் என்பவரின் மகள் நர்மதா (20) என்ற இளம்பெண் கோயமுத்தூர் தனியார் நூல் மில்லில் பணியாற்றிக் கொண்டே தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

அப்போது உடனிருந்த நர்மதாவின் தோழி ஒருவர் செல் நம்பரை கொடுத்து இந்த நம்பரில் எனக்கு அடிக்கடி போன் வருகிறது நீ அவனிடம் பேசு என்று கூறியுள்ளார்.

அந்த செல் நம்பரை நர்மதா தனது செல்போனில் பதிவு செய்து கொண்டு போன் செய்துள்ளார். விவரம் கேட்டு போன் செய்த நர்மதாவை கோகுல் என்பவர் தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். காதலில் விழுந்த நர்மதாவை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அடிக்கடி பேசி உள்ளார்.

இதனால் திருமணத்திற்காக அந்த கம்பெனியில் இருந்து வெளியேறுவதற்காக பெற்றோரிடம் இந்த கம்பெனியில் வேலை கடினமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு வ்னத நர்மதா, பெற்றோருக்கு ஏதேனும் பலகாரம் வாங்கிவிட்டு வருகிறேன் என்று சென்றுள்ளார். ஆனால் அவர் அதன் பின் வீடு திரும்பவேயில்லை.

இதனால் பெற்றோர் அதிர்ச்சியில் இருக்க, அப்போது நர்மதா போன் மூலம், நான் வேறு ஒருவரிடம் இருக்கிறேன், என்னை தேடவேண்டாம் என்று கூறியுள்ளார்.

பெற்றோர் இதைக் கேட்டு, மகள் எங்கிருக்கிறாள், யாருடன் இருக்கிறாள் என்ற விவரம் தெரியாமல் மிகுந்த வேதனையில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு நர்மதா அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நர்மதாவின் பெற்றோர்கள் யார் எவர் என விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மீசைக்காரன் வட்டம் பகுதியை சேர்ந்த மணிபாலன் மகன் கோகுல் (22) என்பது தெரியவந்தது.

கோகுல் என்பவன் நர்மதாவை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி காதல் திருமணம் செய்து கொண்டு 5 மாதம் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு ஆசை தீர்ந்ததும் அவரை விரட்டி அடித்துள்ளான்.

கர்ப்பமாக இருந்த பெண் அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். நர்மதா மட்டுமின்றி பல பெண்களிடம் செல்போன் மூலம் கோகுல் காதல் லீலையில் ஈடுபட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

நர்மதாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த போது பல இளம் பெண்கள், பள்ளி சிறுமிகள் என்று பல பெண்களிடம் செல்போனில் பேசி காதல் வலையில் விழ வைத்து அவர்களிடம் காம லீலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இது குறித்து நர்மதா கோகுலிடம் கேட்ட போது பதில் ஏதும் சொல்லாமல் அம்மா அழைக்கிறார் வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று ஓட்டம் பிடித்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து நர்மதா உறவினர்களிடம் கூறியுள்ளார். உறவினர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கோகுலை நர்மதா உடன் வாழ வருமாறு அழைத்துள்ளனர்.

கொரோனா அதிகமாக பரவி வருகிறது என்னால் இப்போது வர முடியாது பிறகு வருகிறேன் என்று கூறியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நர்மதாவிற்கு குழந்தை பிறந்தது.

அதை பார்க்க வரும் படி அழைத்துள்ளனர். அப்போதும் அவர் கொரோனாவை காரணம் கட்டி பார்க்கமல் இருந்துள்ளார்.

இதனால் நர்மதா கடந்த மாதம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட பொலிசார் விசாரிப்பதாக கூறி அவரை அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையே கோகுல், வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக கூறப்படுவதால், பொலிசாரின் விசாரணைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும்.

You May Like This Video

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்