ஈழத்தமிழரான பிரபல நடிகர் படுகொலை! அதிகளவில் அவருக்கு இருந்த பெண் நண்பர்கள்.. விசாரணையில் வெளிவரும் முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா
2203Shares

சென்னையில் ஈழத்தமிழரான பிரபல நடிகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்வரத்தினம் (41). ஈழத்தமிழரான இவர் சிறு வயதிலேயே பெற்றோருடன் தமிழகம் வந்துள்ளார்.

செல்வரத்தினத்துக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி சீரியலில் செல்வரத்தினம் நடித்து வருகிறார்.

தொலைக்காட்சி நடிகர்களில் இவர் முன்னணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி மற்றும் குழந்தைகள் விருதுநகரில் உள்ளனர். செல்வரத்தினம் மட்டும் தனியாக வாடகை வீட்டில் தங்கியபடியே நடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 6.45 மணிக்கு நடிகர் செல்வரத்தினம் தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொள்ள வெளியே வந்துள்ளார்.

அப்போது ஏற்கனவே அவரது வீட்டின் அருகே ஆட்டோவில் இருந்த 4 பேர் அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியுடன் நடிகர் செல்வரத்தினத்தை பார்த்த உடன் ஓடிவந்தனர். இதை பார்த்த செல்வரத்தினம் சுதாரித்து கொண்டு அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினார். ஆனால் 4 பேர் கொண்ட கும்பல் விடாமல் துரத்தி சென்று பொதுமக்கள் முன்னிலையில் அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

இதனால் வலியால் அலறிதுடித்த செல்வரத்தினம் அங்கேயே உயிரிழந்தார்.

படுகொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆட்டோவில் தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை பொலிசார் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நடிகர் என்பதால் செல்வரத்தினத்திற்கு அதிகளவில் பெண் நண்பர்கள் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

கொரோனா காலமான கடந்த 7 மாதங்களாக வீட்டின் உரிமையாளருக்கு வாடகை கூட கொடுக்காமல் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்கள் பழக்கம் அதிகமாக இருந்ததால் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்