தமிழகத்தில் திருமணம் ஆன 45 நாளில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மனவேதனையில் இருந்த கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, செங்கலட்டு அடுத்து கல்பாக்கத்தை அடுத்த மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு ராணி என்கிற நந்தினி (23) என்ற மகள் உள்ளார்.
இவருக்கும், கல்பாக்கம் புதுப்பட்டினம் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த செங்கழனி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், புதுப்பெண் ராணி கடந்த அக்டோபர் 8-ஆம் திகதி வீட்டில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும்,திருமணமாகி 45 நாளில் புது பெண் தற்கொலை செய்து கொண்டதால் செங்கல்பட்டு கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
மனைவி தற்கொலை செய்து கொண்டதால், சோகத்தில் இருந்த ஜெயப்பிரகாஷ் கடும் மன அழுத்ததில் இருந்துள்ளார்.
இதையடுத்து, ஜெயபிரகாஷ் செவ்வாய்க்கிழமை புதுப்பட்டினம் கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பு பகுதியில் உள்ள சிஐஎஸ்எப் பூங்காவில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கல்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.