இதை நிரூபிக்கத் தவறினால் சசிகலாவுக்கு மீண்டும் சிறை! மூத்த வழக்கறிஞர் கூறிய முக்கிய தகவல்

Report Print Basu in இந்தியா
1475Shares

வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்ட சிறு 2000 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கான வருமானத்தை நிரூபிக்கத் தவறினால் சசிகலாவுக்கு மீண்டும் சிறை தண்டனை விதிக்கப்படும் என மூத்த வழக்கறிஞர் எஸ்.ஹாஜா மொய்தீன் கிஸ்தி தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறை அண்மையில் பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட 2000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது.

மேலும், இந்த சொத்துக்களுக்கான வருமானத்தை 90 நாட்கள் நிரூபிக்கும் படி மூவருக்கும் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்த சொத்துக்களுக்கான வருமானத்தை அவர்கள் நிரூபிக்க தவறினால், சொத்துக்கள் அனைத்து வருமான வரித்தறையால் கையகப்படுத்தப்படும் என மூத்த வழக்கறிஞர் எஸ்.ஹாஜா மொய்தீன் கிஸ்தி தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்தின் கீழ் சசிகலா, இளவரசி சுதாகரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், தற்போதைய சந்தை மதிப்பில் சுமார் 25% அபராதமாக விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவியல் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 1 வருடமும் அதிகபட்சம் 7 வருடமும் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என மூத்த வழக்கறிஞர் எஸ்.ஹாஜா மொய்தீன் கிஸ்தி தெரிவித்துள்ளார

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்